You are connecting from Lake Geneva Public Library, please login or register to take advantage of your institution's Ground News Plan.
Published 5 days ago • loading... • Updated 5 days ago
"பயத்தில் சுற்றுகிறார்கள்...." - அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை வறுத்தெடுத்த திண்டுக்கல் சீனிவாசன்
Summary
இன்று காவிரி விவகாரம் தொடர்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது மேடையில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், ''ஏற்கனவே கட்சியில் இருந்து 6 பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு வெளியேறிவிட்டனர். இவர்களைப் பார்த்துவிட்டு, நாம் இப்போது அவசரப்பட்டுப் பதவியை ராஜினாமா செய்தால், எம்எல்ஏ பதவி போய்விடுமே என்ற பயத்தில் பதவியை தக்கவைக்க சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன், வேலுமணி, ரவி மனோகரன், கே.பி.அன்பழகன் ஆகியோர் ஏன் எடப்பாடி பழனிசாமியை பார்க்க வேண்டும் என பேசி வருகின்றனர். குறிப்பாக சி.வி.சண்முகம் கட்சிக்கு எதிராகப் பேசுவதை நீங்கள் டிவியில் பார்த்திருப்பீர்கள். எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோர் காட்டிய வழியில் அதிமுக என்ற இந்த மாபெரும் இயக்கம் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் திண்டுக்கல் மண்ணில்தான் முதன்முதலாகத் தொடங்கப்பட்டது. அந்தப் பெருமைமிக்க வரலாற்றை யாராலும் மாற்றிவிட முடியாது. கட்சியின் கட்டுப்பாட்டை மீறுபவர்களுக்கு இதில் இடமில்லை. எடப்பாடியாரின் அரசியல் வளர்ச்சியை யாராலும், எந்தச் சக்தியாலும் இனி முடக்கவோ தடுத்து நிறுத்தவோ முடியாது'' என்றார்.
This story is only covered by news sources that have yet to be evaluated by the independent media monitoring agencies we use to assess the quality and reliability of news outlets on our platform. Learn more here.