You are connecting from Lake Geneva Public Library, please login or register to take advantage of your institution's Ground News Plan.
Published 12 days ago • loading... • Updated 12 days ago
'நக்கீரன் ஆசிரியர் கைதை எதிர்த்தவன்; பத்திரிகையாளர்கள் உரிமையை என்றும் காப்பேன்'-வருத்தத்தை தெரிவித்த வைகோ
Summary
நேற்று (30/06/2026) செங்கல்பட்டில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பத்திரிகையாளர்களிடம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆவேசமாகப் பேசியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்தநிலையில் வைகோ மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ''நடந்த சம்பவத்திற்காக என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைக்கு இவ்வளவு கோபப்பட்டு கண்டனம் தெரிவிக்கிறார்கள். கண்டனம் தெரிவிக்க அவர்களுக்கு உரிமை உண்டு. அதற்காக நான் வருத்தப்படுகிறேன். அந்த தோழர் திட்டமிட்டு கேட்டார். ஏற்கனவே ஐந்து நாளைக்கு முன்னாடி வந்த செய்தியினால் என் மனம் புண்பட்டு இருந்ததனால் 'நீங்கள் மஞ்சள் பத்திரிகை தானே' என்று கேட்டேன். அப்படிக் கேட்டு இருக்கக் கூடாது. நான் பத்திரிகையாளர்களை மதிக்கக் கூடியவன். எந்த இடத்திலும் யாரையும் விட்டுக்கொடுக்க மாட்டேன். ஆயிரக்கணக்கான இடங்களில் பத்திரிகையாளர்களை மரியாதையாக நடத்தி இருக்கிறேன். அது அவர்களுக்கு மறந்து போய்விட்டதா? உங்களை ஆபீஸ்க்குள் புகுந்து அடிக்கின்ற கட்சி, உங்கள் முகத்தில் காரித் துப்பிய ஒரு தலைவர்.
This story is only covered by news sources that have yet to be evaluated by the independent media monitoring agencies we use to assess the quality and reliability of news outlets on our platform. Learn more here.