You are connecting from Lake Geneva Public Library, please login or register to take advantage of your institution's Ground News Plan.
Published 13 days ago • loading... • Updated 13 days ago
'ஒரு சதுரடிக்கு ரேட் வைத்த ஒரே ஆட்சி திமுக; கமிஷன், கட்டிங், கரப்ஷன்'-கொந்தளித்த வைகோ
Summary
செங்கல்பட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ திமுக குறித்து ஆவேசமாகப் பேசியது வைரலாகி வருகிறது. அவரது பேச்சில், ''சின்ன குழந்தை இல்லை விஜய். கலை உலகில் சாதித்துவிட்டு வந்தவர். ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு நடந்து செத்துக் கிடந்தவர்களை அன்னைக்கு ராத்திரி பார்க்க வந்த ஒரே நடிகர் விஜய்தான். அது தெரியுமா உங்களுக்கு? ஸ்னோலின் வீட்டுக்கு ராத்திரி 11 மணிக்கு வந்தது விஜய் மட்டும்தான். வேறு யாரும் அல்ல. அவர் பல ஆண்டுகளாகவே மக்கள் சேவை மையத்தை அமைத்து நடத்திட்டு வந்துள்ளார். மக்கள் வெறுப்பின் உச்சத்தில் இருந்தார்கள். இந்த அரசு கமிஷன்,கமிஷன் கமிஷன் என இருந்தது. உங்களுக்கெல்லாம் தெரியும் ஆனாலும் சொல்ல மாட்டீர்கள். ஒரு சதுரடிக்கு இவ்வளவு ரேட் என்று வைத்த ஒரே ஆட்சி திமுக ஆட்சிதான். கமிஷன், கட்டிங், கரப்ஷன். இதை விஜய் ஒழித்துவிட்டார். இந்த கூட்டணியில் தான் நானும் இருந்தேன். கூட்டணியை விட்டு வெளியேவந்த பிறகு அதைப்பற்றி பேசுகிறேன். கூட்டணியில் இருந்து கொண்டு பேசினால் அது அயோக்கியத்தனம் என்பதால் பேசவில்லை.
This story is only covered by news sources that have yet to be evaluated by the independent media monitoring agencies we use to assess the quality and reliability of news outlets on our platform. Learn more here.